WhatsApp Channel
இலங்கை அணி சார்பில் ஹசரங்கா அரைசதம் அடித்தார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இலங்கை அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும் கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்கியது.
டி20 தொடரின் முதல் போட்டி இன்று நடக்கிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன் பின்னர் இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசங்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள்.
நிசங்க 6 ரன்களும், மெண்டிஸ் 10 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். களம் இறங்கிய தனஞ்சய டி சில்வா 24 ஓட்டங்களிலும், சரித் அசலங்க 3 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை அணி 55 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதன் பின்னர் ஜோடி சேர்ந்த சதீர சமரவிக்ரம மற்றும் வனிந்து ஹசரங்க நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். சமரவிக்ரம 25 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஹசரங்கா அரைசதம் அடித்து 67 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களம் இறங்கிய இலங்கை வீரர்கள் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் இலங்கை அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக ஹசரங்கா 67 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் ஃபரூக்கி 3 விக்கெட்டுகளையும், நவீன் உல் ஹக், ஒமர்சாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதன்பின் 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் விளையாட உள்ளது.
Discussion about this post