WhatsApp Channel
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் மற்றும் அவரது மகனும் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. அவருடன் 14 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் சேருவார்கள் என தெரிகிறது. இதை உறுதி செய்யும் வகையில் கமல்நாத்தின் மகன் நகுல் தனது சமூக வலைதள பக்கத்தில் உள்ள தனது சுயவிவரத்தில் இருந்து காங்கிரஸ் என்ற பெயரை நீக்கியுள்ளார்.
மேலும், சிந்த்வாரா பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த கமல்நாத், தனது பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டு இன்று டெல்லி சென்றார்.
இதனிடையே தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கமல்நாத் அளித்த பேட்டியில், காங்கிரஸ் கட்சியில் நடக்கும் நிகழ்வுகள் மகிழ்ச்சியாக இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
நான் பாஜகவில் இணைந்தால் முதலில் உங்களுக்கு (பத்திரிக்கையாளர்களுக்கு) தெரிவிப்பேன். டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ள கமல்நாத் இன்னும் ஓரிரு நாட்களில் பாஜகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post