WhatsApp Channel
ஐபிஎல் 17வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
ஐபிஎல் 17வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்த லீக் போட்டிகளின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.
இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றிருந்த இலங்கையின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா, தொடரில் இருந்து முழுமையாக விலகப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேசத்துக்கு எதிரான தொடரின் போது அவருக்கு இடது குதிகாலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரை கருத்தில் கொண்டு நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து அவர் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post