WhatsApp Channel
மிக்ஜம் புயல் சென்னையின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக ஸ்தம்பிக்க வைத்தது.
`மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னையில் பலத்த மழை பெய்து நகரமே தண்ணீரில் தத்தளித்தது. நகரின் பெரும்பாலான சாலைகள் மற்றும் சுரங்கப் பாதைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தாழ்வான பகுதிகளில் தேங்கிய வெள்ள நீரை அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மிக்ஜம் புயலை பொதுமக்கள் தொடர்பு கொள்ள முக்கிய தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியின் அவசரக் கட்டுப்பாட்டு அறையை 1913 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்; 9445477205 வாட்ஸ்அப் எண், 04425619207, 04425619206, 04425619204 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
உங்கள் பகுதியில் மிக்ஜம் புயல் பாதிப்புகளை 8939888401 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Discussion about this post