WhatsApp Channel
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் வரும் 22ம் தேதி திறக்கப்படுகிறது. இதில், கோவில் கருவறையில் வைக்கப்பட்டுள்ள ராமர் சிலையை காண லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் கலந்து கொள்ள உள்ளனர். பா.ஜ.,வை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரகாஷ், ராமராஜசேகர், ராம்குமார் உள்ளிட்டோர் விழாக்குழு நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கினர்.
Discussion about this post