தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,317 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 21,48,346 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 32,263 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 18,34,439 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகளவிலேயே இருந்து வருகிறது. மேலும் 483 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 25,205 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேர நிலவரப்படி 2,88,702 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.