WhatsApp Channel
மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“அமித் ஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் ஏழைகளின் சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதில் ஆர்வமாக உள்ளார். அவர் ஒரு சிறந்த நிர்வாகியாக முத்திரை பதித்துள்ளார், இந்தியாவின் பாதுகாப்பு இயந்திரங்களை மேம்படுத்தவும், கூட்டுறவுத் துறையை மேம்படுத்தவும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார். பாஜகவை வலுப்படுத்துவது பாராட்டுக்குரியது.
இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
Discussion about this post