WhatsApp Channel
இந்தியாவுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இன்றைய உலகக் கோப்பை போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா, நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டெவான் கான்வே மற்றும் வில் யங் களமிறங்கினர். கான்வே 0 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். வில் யங் 17 ரன்களில் ரச்சின் ரவீந்திர மற்றும் டேரில் மிட்செல் ஆகியோரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். நியூசிலாந்துக்கு இந்த ஜோடி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தது. இருவரும் சிறப்பாக விளையாடி அரை சதம் கடந்தனர். ரச்சின் ரவீந்திரன் 87 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடங்கும்.
அதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து வீரர்கள் டாம் லாதம் (5 ரன்), மார்க் சாப்மேன் (6 ரன்), கிளென் பிலிப்ஸ் (23 ரன்), சாண்ட்னர் (1 ரன்) ஆகியோர் ஆட்டமிழந்தனர். தொடக்கம் முதலே அபாரமாக ஆடிய டேரில் மிட்செல் அதிரடியாக சதம் அடித்தார். அவர் 127 பந்துகளில் 130 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 9 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடங்கும்.
நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கும்.
Discussion about this post