WhatsApp Channel
பாஜக தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் தொடங்கியது.
அடுத்த சில மாதங்களில் 2024 மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், பாஜக தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கியது.
நட்டா தலைமையில் நடைபெற்ற இரண்டு நாள் செயற்குழு கூட்டத்தை பாஜக தேசிய தலைவர் ஜேபி பிரதமர் நரேந்திர மோடி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். நாடு முழுவதும் இருந்து 11,500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
தற்போதைய அரசியல் நிலவரம், லோக்சபா தேர்தல் வியூகம், கூட்டணி பேச்சுவார்த்தை போன்ற விவகாரங்கள் செயற்குழுவில் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றும் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
Discussion about this post