WhatsApp Channel
ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் மாற்ற இன்று கடைசி நாள்.
நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக மே 10-ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி செப்டம்பர் 30ம் தேதி வரை மக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து ரூ.2000 நோட்டை மாற்றுவதற்கான காலக்கெடு ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், ரூ.2000 நோட்டை வங்கிகளில் மாற்ற இன்று கடைசி நாள்.
இன்றுக்குள் வங்கிகளில் ரூ.2000 நோட்டுகளை மாற்ற முடியாதவர்கள் நாளை முதல் ரூ.20,000 வரையிலான ரூ.2000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள 19 கிளைகளில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ரூ.2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
Discussion about this post