WhatsApp Channel
வேட்டையன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புதிய படமான ‘வேட்டையன்’ படத்தை இயக்குநர் ஞானவேல்ராஜா இயக்கி வருகிறார். இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஹைதராபாத், ஆந்திரா ஆகிய இடங்களில் வேடடியான் படமாக்கப்பட்டது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பை சென்றார். விமான நிலையத்தில் காரில் இருந்து இறங்கிய ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Discussion about this post