WhatsApp Channel
தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர் தயாராகிவிட்டதாக அனிமல் பட இயக்குனர் சந்தீப் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அக்டோபரில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளார்.
இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘தலைவர் 171’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்நிலையில், தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர் தயாராகிவிட்டதாக அனிமல் படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி தெரிவித்துள்ளார். யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது: தலைவன் 171 படத்தின் டைட்டில் டீசர் தயாரிக்கும் பணிகள் முடிந்துவிட்டன. டைட்டில் டீசரை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். படக்குழு விரைவில் வெளியிடவுள்ளது. படம் பற்றிய மற்ற தகவல்களுக்கு காத்திருக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
‘தலைவர் 171’ படத்தின் டைட்டில் டீசர் வரும் 22ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ரஜினியின் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டர் வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது.
Discussion about this post