WhatsApp Channel
அ.தி.மு.க.வில் இருந்த நடிகை ஆர்த்தி, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அக்கட்சியில் இருந்து விலகினார்.
நகைச்சுவை நடிகர்கள் அதிகம் இருந்தாலும் தமிழ் சினிமாவில் காமெடி நடிகைகளாக முத்திரை பதித்தவர்கள் ஆச்சி மனோரமா, கோவை சரளா, வித்யுலேகா, ஜாங்கிரி மதுமிதா என ஒரு சிலரே.. அந்த வரிசையில் நடிகை ஆர்த்தியும் ஒருவர். ஆர்த்தி என்கிற ஆர்த்தி ரவி பல்வேறு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் கணேஷை திருமணம் செய்து கொண்டார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு முன், 2014ல், அ.தி.மு.க.,வில் முக்கிய உறுப்பினராக சேர்ந்த நகைச்சுவை நடிகை ஆர்த்தி, அவரது மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வில் இருந்து விலகினார். தொடர்ந்து படங்களில் மட்டும் நடித்து வந்தார். இந்நிலையில் நடிகை ஆர்த்தி தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார். ஆர்த்தியின் கணவர் கணேஷ் பாஜகவைச் சேர்ந்தவர்.
Discussion about this post