Home Cinema “மாரி செல்வராஜ் விரைவில் பான் இந்தியா படம் இயக்க வேண்டும்” – இயக்குநர் ராம் விருப்பம்!

“மாரி செல்வராஜ் விரைவில் பான் இந்தியா படம் இயக்க வேண்டும்” – இயக்குநர் ராம் விருப்பம்!

0

விரைவில் ஷாருக் கான் மற்றும் ஆமிர் கான் ஆகியோர் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு பான் இந்தியா திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்குவார் என்று நான் நம்புகிறேன்.

சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில், ராம் கூறியதாவது:

‘மாரி செல்வராஜின் வெற்றி என்பது நம் அனைவரின் வெற்றியாகும் — அது எங்கள் குழுவின், எங்கள் குடும்பத்தின் வெற்றியாகும். ஆனால், இதை விட அதிகமான வளர்ச்சி அவருக்குத் தேவை என எனக்கு தோன்றுகிறது. பான் இந்தியா ரேஞ்சில் இயக்கும் திறமை அவரிடம் உறுதியாக உள்ளது. பாரதிராஜாவுக்குப் பிறகு, மிக விரைவில் படங்களை இயக்கும் திறமை கொண்டவர் மாரி செல்வராஜ் தான். ஒவ்வொரு படத்திற்கும் முன்னேற்றம்தான்.

‘பரியேறும் பெருமாள்’ விட, ஒரு முழுமையான படமாக எனக்கு ‘வாழை’ அதிகம் பிடித்தது. தற்போது ‘வாழை’-யை விட, ‘பைசன்’ ஒரு படைப்பாகவும், அதன் உள்ளடக்கம், உணர்ச்சி வெளிப்பாடு, மற்றும் சிக்கலான விவரங்களை படம் பிடித்த விதத்திலும் மிகச் சிறப்பாக உள்ளது.

அவர் இன்னும் பெரிய அளவுக்கு செல்வதை விரும்புகிறேன். விரைவில் ஹிந்தி மொழியில் பான் இந்தியா படமொன்றை இயக்குவார் என எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர் ஷாருக் கான் மற்றும் ஆமிர் கானுடன் வேலை செய்ய வேண்டும். அந்த நேரத்தில் ஷாருக் கானுடன் ஒரு புகைப்படம் எடுப்பதே என் ஆசை. ஏனெனில், நான் அவருடைய தீவிர ரசிகன்,’ என ராம் கூறினார்.

ராம் இயக்கிய புதிய திரைப்படம் ‘பறந்து போ’

மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ், மாஸ்டர் மிதுல் ரியான் மற்றும் அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையை சந்தோஷ் தயாநிதி அமைத்துள்ளார்.

ஜூலை 4-ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் விளம்பரப்பணிகளில் இயக்குநர் ராம் மற்றும் படக்குழுவினர் முழுமையாக ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here