WhatsApp Channel
திமுக அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்களுடனான தனது உறவு குறித்து டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் திமுக ஜாபர் சாதிக் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
டில்லியில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குனர் ஞானேஷ்வர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அதில், திமுக ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்தி முக்கிய வாக்குமூலம் பெற்றுள்ளோம். இதில் ஜாபர் சாதிக், தனக்கு அரசியல், திரைத்துறை, கட்டுமானத் துறை ஆகிய துறைகளின் முக்கியப் புள்ளிகளுடன் தொடர்பு இருப்பதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
குறிப்பாக இயக்குனர் அமீர் மற்றும் திமுக ஜாபர் சாதிக் இடையேயான தொடர்பு விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில், போதைப்பொருள் தொடர்பான பிரபலங்களின் பெயர்கள் வெளியிடப்படும்.
போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை சினிமா, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களில் முதலீடு செய்து கடந்த 3 ஆண்டுகளில் 3,500 கிலோ போதைப்பொருள் கடத்தியதாகவும் அவர் கூறினார்.
மேலும், திமுக ஜாபர் சாதிக் எந்த அரசியல் கட்சிகளுக்கு நிதி அளித்தார்? போதைப்பொருள் கடத்தல் மூலம் நிதி ஆதாயம் அடைந்தவர்களை அடையாளம் காண விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், விரைவில் கூடுதல் தகவல்கள் வெளியாகும்.
திமுக ஜாபர், குற்றம் நிரூபிக்கப்பட்டால், NDPS சட்டம், 1985-ன் கீழ் பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்.
AthibAn Tv WHATSAPP சேனலில் இணைய
வாட்ஸ்அப் சேனல் மூலம் இணையும் போது உங்கள் தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது, Green பட்டனை தொடவும் .
மேலும் தந்திச் செய்தி மூலம் முக்கிய தகவலுக்கு Red பட்டனை தொடவும்.
Discussion about this post