20 கி.மீக்கு 3000 ரூபாய் கேட்டதால் குழந்தைகளுடன் 20 கி.மீ நடந்த தம்பதியினர் – தமிழகத்தில் வட மாநிலத்தில் செயல்…!

0
தமிழக போராளிகளுக்கு ஓர் சுபாவம் உண்டு வட மாநிலங்களில் ஏதேனும் சம்பவம் நடந்தால் அதனை ஊதி பெரிதாக்கி “பார்த்தீர்களாவட மாநில கொடுமையை” என தம்பட்டம் அடித்து விளம்பரம் செய்வர், அதே தமிழகத்தில் வட மாநில சம்பவம் போன்று நடந்தால் அதனை கண்டுகொள்ளாமல் செல்வதும் நடந்தேறி வருகிறது. அந்த வகையில் வேலூரில் ஆட்டோவிற்கு ரூ.3 ஆயிரம் கேட்டதால் தம்பதியினர் தங்கள் குழந்தையுடன் 20 கிமீ நடந்தே சென்ற கோர சம்பவம் நடந்தேறியுள்ளது.
பெங்களூரில் இருந்து ஒரு தம்பதியினர் காட்பாடிக்கு ரெயிலில் வந்தனர். வேலூர் அடுத்த கணியம்பாடிக்கு ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தவர்கள் காட்பாடியிலிருந்து கணியம்பாடி செல்ல ஆட்டோ இருக்கிறதா என்று தேடியுள்ளனர். அப்போது நோயாளிகளை ஏற்றிச் செல்ல அனுமதி வாங்கியிருந்த ஒரு சில ஆட்டோக்கள் ஓடின. ஒரு ஆட்டோ டிரைவரிடம் கணியம்பாடி செல்ல வேண்டும் என்று கூறி கட்டணம் கேட்டனர். அவர் ரூ.3 ஆயிரம் கேட்டுள்ளார்.
காட்பாடியில் இருந்து கணியம்பாடி 20 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. இதற்கு ரூ.3 ஆயிரமா? என்று அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஊரடங்கு நேரத்தில் எந்தவித போக்குவரத்தும் இல்லையே என வருந்தினர். பின்னர் தாங்கள் கொண்டு வந்த பைகள், குழந்தைகளுடன் 20 கி.மீ தூரம் நடந்தே கணியம்பாடிக்கு சென்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here