WhatsApp Channel
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் லீக் போட்டியில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பெண்களுக்கான 7வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடந்து வருகிறது. நேற்று இரவு நடந்த ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியனான ஜப்பானை வீழ்த்தியது.
இந்தியா சார்பில் நவ்நீத் கவுர் (31வது நிமிடம்), சங்கீதா குமாரி (47வது நிமிடம்) கோல் அடித்தனர். இந்திய அணி தொடர்ந்து 4வது வெற்றியை ருசித்து 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஜப்பான் 3 வெற்றி, 1 தோல்வியுடன் 9 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.
ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறியுள்ள இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நாளை தென் கொரியாவை எதிர்கொள்கிறது.
Discussion about this post