WhatsApp Channel
லோக்சபா தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டது. தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.வேட்பு மனு தாக்கல் மார்ச் 20ம் தேதி தொடங்குகிறது.
இந்தியாவில் ஜூன் 6-ம் தேதியுடன் மத்திய அரசு முடிவடையும் நிலையில், தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும், ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வேட்புமனு தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கும் என்றும், வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 27ஆம் தேதி கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளான மார்ச் 28 மற்றும் மார்ச் 30 ஆகிய தேதிகளில் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு முதல்கட்ட தேர்தல்: 39 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட தமிழகத்துக்கும், 1 நாடாளுமன்றத் தொகுதியைக் கொண்ட புதுச்சேரிக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை 6,18,90,348 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 3,30,96,330; பெண் வாக்காளர்கள் 3,41,85,724 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 8,294.
மேலும் வேட்புமனு தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கும் என்றும், வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 27ஆம் தேதி கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளான மார்ச் 28 மற்றும் மார்ச் 30 ஆகிய தேதிகளில் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்னும் 4 நாட்களில் வேட்புமனு தாக்கல் தொடங்கும். இன்னும் 32 நாட்களில் தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதன் பிறகு 45 நாட்களுக்கு பிறகு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.
தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் அட்டவணை
மார்ச் 20: வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது
மார்ச் 27: வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்
மார்ச் 28: வேட்புமனுக்கள் பரிசீலனை
மார்ச் 30: வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள்
ஏப்ரல் 19: தமிழகத்தின் புதுச்சேரியில் வாக்குப்பதிவு
ஜூன் 4 : வாக்கு எண்ணிக்கை (முடிவு)
Discussion about this post