மகாராஷ்டிர மாநிலம் ஜல்கானில் லட்சதிபதி சகோதரி திட்டத்தின் கீழ் பெண் பயனாளிகளுக்கு சான்றிதழை பிரதமர் மோடி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், லட்சாதிபதி சகோதரி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள பெண்கள் நலனுக்காக 6 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றார்.
இதன் மூலம் லட்சக்கணக்கான பெண்கள் கோடீஸ்வரர்களாக மாறுவார்கள் என நம்பிக்கை தெரிவித்த பிரதமர் மோடி, நேபாள பேருந்து விபத்தில் உயிரிழந்த ஜல்கான் மக்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
போலந்தில் இருந்து திரும்பியதை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, அந்த நாட்டு மக்கள் மகாராஷ்டிரா மக்களை மிகவும் மதிக்கிறார்கள் என்றும் போலந்து தலைநகரில் கோலாப்பூர் நினைவகம் இருப்பதாகவும் கூறினார்.
இரண்டாம் உலகப் போரின் போது கோலாப்பூர் அரச குடும்பம் போலந்து நாட்டைச் சேர்ந்த பல தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆதரவளித்ததாக பிரதமர் மோடி குறிப்பிட்டார், எனவே கோலாப்பூர் மக்களின் சேவை மற்றும் விருந்தோம்பலை கவுரவிக்கும் வகையில் அங்கு நினைவிடம் கட்டப்பட்டது.
மத்திய அரசின் திட்டத்தால் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு கோடி பெண்கள் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளதாகவும், குறிப்பாக கடந்த 2 மாதங்களில் மட்டும் 11 லட்சம் பெண்கள் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளதாகவும் பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.