WhatsApp Channel
பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் தேதி குறித்த விவரங்கள் உச்ச நீதிமன்றத்தில் பகிரப்பட்டன.
பாகிஸ்தானில் 2022 ஏப்ரலில் பிரதமராக இருந்த இம்ரான் கானின் அரசு நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் நீக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலை நீடிக்கிறது.
இதையடுத்து, இந்த ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இதையடுத்து, நாட்டில் 90 நாட்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என தொடர்ந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஆனால் தேர்தல் தாமதமானது. இந்நிலையில், இறுதியாக தேர்தல் தேதியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதன்படி பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜியோ நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில், அந்நாட்டு தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் தேதி குறித்த விவரங்களை உச்சநீதிமன்றத்தில் பகிர்ந்துள்ளார்.
Discussion about this post