WhatsApp Channel
திருநெல்வேலி மாவட்டம் மணிமூர்த்தீஸ்வரம் ஆற்றுப் பகுதியில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் மீது, ஜாதியைக் கேட்டு ஒரு கும்பல் கஞ்சா போதையில் தாக்குதல் நடத்தியதோடு, இருவரையும் நிர்வாணப்படுத்தி, அவர்கள் மீது சிறுநீர் கழித்து வன்கொடுமையில் ஈடுபட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இந்த மனிதத் தன்மையற்ற செயலில் ஈடுபட்டவர்களை, தமிழக பாஜக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
ஜாதிய ரீதியிலான குற்றங்கள் நடக்காமல் தடுத்து நிறுத்துவதும், பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் தான் அரசின் கடமை.
மாதம் ஒரு குற்றம் நடந்த பிறகு, கோபாலபுர அரசியல் வாரிசுகளில் ஒருவரை அனுப்பி வசனம் பேசி சமாளிப்பது, நிரந்தரத் தீர்வு தராது என்பதை முதலமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
Discussion about this post