WhatsApp Channel
போர் திறன்களை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை கிம் ஜாங் உன் வெளியிட்டார்.
வடகொரியாவில் விமானப்படை தினத்தையொட்டி அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தனது மகளுடன் விமானப்படை தலைமையகத்திற்கு வருகை தந்தார். இதைத் தொடர்ந்து விமானப்படை வீரர்களின் வான்வழி சாதனைகள் நடந்தன.
இந்த நிகழ்வின் போது, போர் திறன்களை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை கிம் ஜாங் உன் வெளியிட்டார். எதிரிகளின் அனைத்து வகையான தாக்குதல்களுக்கும் பதிலடி கொடுக்க வடகொரிய ராணுவம் தயாராக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
Discussion about this post