WhatsApp Channel
அபுதாபியில் இந்து கோவிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்திய பிரதமர் மோடி 2015 ஆம் ஆண்டு முதல் முறையாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அதிகாரப்பூர்வ பயணமாக சென்றார். அப்போது, ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்திய இந்துக்களுக்கு அபுதாபியில் இந்து கோவில் கட்ட வேண்டும் என்ற மோடியின் கோரிக்கையை ஐக்கிய அரபு அமீரக அரசு ஏற்றுக்கொண்டது.
இதையடுத்து, துபாய்-அபுதாபி ஷேக் சயீத் சாலையில் அல் ரக்பா அருகே உள்ள முரைக்கா பகுதியில் இந்து கோவில் கட்ட அபுதாபி அரசால் 55,000 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டது. கோவிலின் அடிக்கல் 2018 இல் நாட்டப்பட்டது. பிரதமர் மோடி துபாயில் இருந்து காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தார். இதையடுத்து, கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன.
இந்நிலையில், அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்து கோவிலை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். 2 நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடி, அபுதாபியில் இந்து கோவிலை திறந்து வைத்தார்.
கோவிலை திறந்து வைத்த பிரதமர் மோடி, அங்கு நிறுவப்பட்ட சுவாமி நாராயணன் சிலைக்கு பூஜை செய்தார்.
Discussion about this post