WhatsApp Channel
இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே 4 நாள் பயணமாக அமெரிக்கா சென்றார்.
இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே 4 நாள் பயணமாக கடந்த 11ம் தேதி அமெரிக்கா சென்றார். இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே பல வருடங்களுக்கு பிறகு அமெரிக்கா சென்றார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இந்தப் பயணத்தின் சிறப்பம்சமாக அமெரிக்க ராணுவத் தளபதி ராண்டி ஜார்ஜ் மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகளை மனோஜ் பாண்டே இன்று புளோரிடாவில் சந்தித்தார். அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ ஒத்துழைப்பு, உலக அமைதி மற்றும் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து உயர்மட்டக் கூட்டத்தை நடத்தினார்.
இந்திய ராணுவத்தின் பொதுத் தகவல் கூடுதல் இயக்குநரகம் தனது அதிகாரப்பூர்வ X சமூக ஊடகப் பக்கத்தில் இதனை அறிவித்துள்ளது.
Discussion about this post