WhatsApp Channel
அயோத்தி ராமரின் இருப்பிடம் என்று கூறப்படுகிறது. பிரதமர் மோடி கூறுகையில், ராணுவ வீரர்கள் வாழும் இடம் தான் அயோத்தி.
பிரதமராக பதவியேற்றதில் இருந்து ஒவ்வொரு தீபாவளியையும் ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை மோடி வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் பிரதமர் மோடி ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். இமாச்சல பிரதேசத்தின் லெப்ஷா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-
அயோத்தி ராமரின் இருப்பிடம் என்று கூறப்படுகிறது. என்னைப் பொருத்தவரை வீரர்கள் இருக்கும் இடம் அயோத்தி. இந்திய ராணுவத்தின் இருப்பிடம் ஏறக்குறைய ஒரு கோவிலுக்குச் சமமானது. எல்லையில் நாட்டின் வலிமையான சுவர் தாங்கள் என்பதை ராணுவ வீரர்கள் எப்போதும் நிரூபித்துள்ளனர். 140 கோடி இந்தியர்கள் தங்கள் குடும்பம் என்பது ராணுவ வீரர்களுக்கு தெரியும்.
கடந்த 35 ஆண்டுகளில் ராணுவ வீரர்களுடன் கொண்டாடாத தீபாவளி இல்லை. நான் பிரதமராக இல்லாவிட்டாலும், முதல்வராக இல்லாவிட்டாலும் தீபாவளி அன்று எல்லைக்கு செல்வேன். குடும்பத்தை விட்டு வெளியேறி எல்லையில் நிற்பது உங்கள் பணியின் உச்சத்தை காட்டுகிறது. தேசத்தைக் கட்டியெழுப்புவதில் தற்காப்புப் படைகள் தொடர்ந்து பங்களிக்கின்றன” என்று அவர் கூறினார்.
Discussion about this post