WhatsApp Channel
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்திய அரசு பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்த வரிசையில் வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு அளிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை, சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வங்கி ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஊதிய உயர்வு கோரிக்கை நிறைவேற்றப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க இந்திய வங்கியாளர்கள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர் சங்கத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஊதிய உயர்வு நவம்பர் 2022 முதல் அமல்படுத்தப்படும். இதன் மூலம் நாடு முழுவதும் சுமார் 8 லட்சம் வங்கி ஊழியர்கள் பயனடைவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஊதிய உயர்வு காரணமாக பொதுத்துறை வங்கிகளுக்கு ஆண்டுக்கு ரூ.8,284 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், வாரத்திற்கு 5 நாட்கள் வேலை என்ற மற்றொரு முக்கிய கோரிக்கையை பரிசீலித்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. வங்கிகளின் மாற்றியமைக்கப்பட்ட வேலை நேரம் தொடர்பான அரசின் அறிவிப்புக்குப் பிறகு இது அமலுக்கு வரும் என்றும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, வங்கி அலுவலர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “8088 புள்ளிகளுடன் தொடர்புடைய அலவன்ஸ் மற்றும் கூடுதல் விகிதங்களை இணைத்து, புதிய ஊதிய விகிதங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த புதிய ஊதிய தீர்வின்படி, அனைத்து பெண் ஊழியர்களும் ஒரு நாள் எடுக்க அனுமதிக்கப்படுவர். மருத்துவ சான்றிதழை வழங்காமல் மாதத்திற்கு மருத்துவ விடுப்பு.”
நேற்று முன்தினம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டது. அதாவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் 4% ஊதிய உயர்வு வழங்க டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அலவன்ஸ் விகிதம் 46%லிருந்து 50% ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், இன்று வங்கி ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான சம்பள உயர்வு தற்போது அதிகரித்துள்ள நிலையில், இது மத்திய அரசின் தேர்தல் பிரசாரம் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
AthibAn Tv WHATSAPP சேனலில் இணைய
வாட்ஸ்அப் சேனல் மூலம் இணையும் போது உங்கள் தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது, Green பட்டனை தொடவும் .
மேலும் தந்திச் செய்தி மூலம் முக்கிய தகவலுக்கு Red பட்டனை தொடவும்.
Discussion about this post