WhatsApp Channel
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் எந்தெந்த கட்சிகள் வெற்றி பெறும் என்பது குறித்து டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு நடத்தி, அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படாவிட்டாலும், தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வில் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழகத்தை பொறுத்த வரையில் இந்த முறை நான்கு முனை போட்டி நிலவுகிறது.
திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்துப் போட்டியிடுகின்றன.
தற்போது திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய லீக் உள்ளிட்ட 2 கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் இழுபறி நீடித்து வருகிறது. அதேபோல், தேமுதிகவும், பாஜகவும் கூட்டணி பேச்சுவார்த்தையில் மும்முரமாக உள்ளன. நாம் தமிழர் கட்சி தனித்து களம் கண்டுள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி Times Now – IDG Resurge அமைப்பு சார்பில் இந்தியா முழுவதும் சர்வே நடத்தப்பட்டது. மொத்தம் 3 லட்சத்து 23 ஆயிரத்து 357 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், 85 சதவீதம் பேர் நேரிலும், 15 சதவீதம் பேர் தொலைபேசியிலும் நேர்காணல் செய்யப்பட்டனர். இந்த ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது தமிழகத்தில் மொத்தம் 39 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குறைந்தபட்சம் 29 முதல் அதிகபட்சமாக 35 இடங்கள் வரை வெற்றி பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, அதிமுக கூட்டணியை விட பாஜக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 2 முதல் 6 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்பிறகுதான் அதிமுக தலைமையிலான கூட்டணி 1 முதல் 3 இடங்களை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியைத் தவிர மற்றவர்கள் 0-2 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
AthibAn Tv WHATSAPP சேனலில் இணைய
வாட்ஸ்அப் சேனல் மூலம் இணையும் போது உங்கள் தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது, Green பட்டனை தொடவும் .
மேலும் தந்திச் செய்தி மூலம் முக்கிய தகவலுக்கு Red பட்டனை தொடவும்.
Discussion about this post