WhatsApp Channel
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் சமீபகாலமாக முக்கியமான படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகர்களாகவும் நடித்து வருகிறார்.
அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ கலவையான விமர்சனங்கள் இருந்தபோதிலும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது.
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படமும் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் கௌதம் வாசுதேவ் மேனன் உலக கோப்பை முதல் அரையிறுதியில் இந்தியா மற்றும் நியூசி அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கேட்ட கேள்விக்கு கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறியுள்ளார்.
இரண்டு கிரிக்கெட் வீரர்கள் மாவட்ட அளவில் இருந்து மாநில அளவில் கிரிக்கெட் விளையாடும் கதையாக இது இருக்கப் போகிறது என்றார்.
Discussion about this post