WhatsApp Channel
விஜயகாந்த் மறைவை முன்னிட்டு இன்று காலை திரையரங்குகள் திரையிடப்படுவதை ரத்து செய்துள்ளனர்.
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், கொரோனா தொற்று காரணமாக இன்று காலமானார்.
விஜயகாந்தின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் விஜயகாந்த் மறைவை முன்னிட்டு நாளை அனைத்து விதமான படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. மேலும், திரையரங்குகளில் இன்று காலை காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Discussion about this post