WhatsApp Channel
விஜயகாந்தின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், கொரோனா தொற்று காரணமாக இன்று காலமானார்.
விஜயகாந்த் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது;
“விஜயகாந்த் மறைவு ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் ஜாம்பவான் விஜயகாந்த் தனது நடிப்பால் பலரது இதயங்களைத் தொட்டார். பொது சேவையில் ஈடுபட்டு வந்த விஜயகாந்தின் மறைவு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. அதை நிரப்புவது கடினம். அன்புடன் நினைவில் கொள்கிறேன். விஜயகாந்துடனான எனது நினைவுகள்.” என தெரிவித்துள்ளார்.
Discussion about this post