WhatsApp Channel
நடிகர் விஜய் தமிழ்நாடு வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார்.
நடிகர் விஜய் தமிழ்நாடு வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கடந்த 2ம் தேதி கட்சி தொடங்கும் அறிவிப்பை விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
தமிழ்நாடு வெற்றி கழகம் என்ற கட்சி தொடங்கியுள்ள விஜய்க்கு மக்கள், ரசிகர்கள், அரசியல் கட்சியினர், திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், புதிய கட்சி தொடங்குவதற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தமிழ்நாடு வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மதிப்பிற்குரிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அன்பான திரையுலக நண்பர்களே, அன்பான தமிழகத் தாய்மார்களே, சகோதர சகோதரிகளே, ஊக்கமளிக்கும் பத்திரிக்கையாளர்களே, தமிழக மக்களின் அரசியல் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த “என் நெஞ்சில் தோழிகளே” மனமார்ந்த நன்றி.
Discussion about this post