WhatsApp Channel
சச்சின் டெண்டுல்கர் 2003 உலகக் கோப்பையில் 673 ரன்கள் எடுத்தார்.
உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்தார். சச்சின் டெண்டுல்கர் 2003 உலகக் கோப்பையில் 673 ரன்கள் எடுத்தார்.
இந்த நிலையில், நடப்பு உலக கோப்பை தொடரில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 673 ரன்களை கடந்துள்ளார். இதன் மூலம் உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் (673) சாதனையை விராட் கோலி (674*) முறியடித்தார்.
மேலும் விராட் கோலி உலக கோப்பை தொடரில் அதிக 50+ ரன்கள் எடுத்த சாதனையையும் படைத்துள்ளார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் 7 முறை 50+ ரன்கள் குவித்து 50+ ரன்களைக் கடந்த சச்சின் (2003), ஷாகிப் அல் ஹசன் (2019) ஆகியோரின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.
Discussion about this post