WhatsApp Channel
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் அனேக இடங்களிலும், புதுவை, காரைக்கால் மற்றும் மத்திய தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தொடர் மழை காரணமாக கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும், தொடர் மழையும் பெய்து வருகிறது
Discussion about this post