WhatsApp Channel
காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி பொதுமக்களின் பயணத்தை எளிதாக்க சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இரண்டாவது ‘காசி தமிழ் சங்கம்’ நிகழ்ச்சி வாரணாசியில் வரும் 17ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடக்கிறது. இதனை முன்னிட்டு டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல், கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
காசி தமிழ்ச்சங்க நிகழ்ச்சிக்காக தென்னிந்தியாவில் இருந்து வாரணாசிக்கு வரும் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பயணிக்க வசதியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அதன்படி, ரயில் எண். 06101, டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – வாரணாசி சிறப்பு ரயில் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து 15ம் தேதி புறப்படும்.
ரயில் எண். 06103, கன்யாகுமரி-வாரணாசி சிறப்பு ரயில் 20ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து புறப்படும். ரயில் எண் 06105, கோயம்புத்தூர்-வாரணாசி சிறப்பு ரயில் 19ம் தேதி மாலை 4.30 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும்.
Discussion about this post