WhatsApp Channel
கார்த்தி நடிக்கும் படம் ‘ஜப்பான்’. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.
ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘ஜப்பான்’. இதில் ‘துப்பறிவாளன்’, ‘நம்மவீடு பிள்ளை’ போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ‘ஜப்பான்’ திரைப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் இந்த டிரைலர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததுடன் யூடியூபில் மூன்று மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இந்த வீடியோவை படக்குழு ஷேர் செய்து இதனை அறிவித்துள்ளது.
Discussion about this post