WhatsApp Channel
அவதூறு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
கடந்த அக்., தமிழக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, கடந்த மாதம், “பேசு தமிழா பேசு’ என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டிருப்பது இந்து கலாச்சாரத்தை அழிக்கும் நோக்கத்தில் உள்ளது.
தீபாவளியன்று பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்று கிறிஸ்தவ மிஷனரிகளுடன் சேர்ந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும் அவர் கூறினார்.
வழக்கு: இது தொடர்பாக சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், சேலத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மனுஷ் என்பவர் தனி நபர் புகார் மனு தாக்கல் செய்தார். இரு மதத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவல்களை பரப்பிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்த மனுவை விசாரித்த சேலம் நீதிமன்றம், விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பியது.
சம்மனை ரத்து செய்யவும், நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணாமலை மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என்று கூறிய அண்ணாமலை, தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஓராண்டுக்கு முன்பே இந்த பேச்சு ஒலிபரப்பப்பட்டாலும் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றும் கூறினார். இந்த வழக்கை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
உத்தரவு: ஆனால், வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், வழக்கை ரத்து செய்ய மறுத்து, அண்ணாமலை மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், அண்ணாமலையின் பேச்சுக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடும் கண்டனம் தெரிவித்தார். அண்ணாமலை மீதான வழக்கை சேலம் கீழமை நீதிமன்றம் பரிசீலிக்கும் என்றும் உத்தரவிட்டார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேல்முறையீடு: சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அண்ணாமலை தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வருகிறது. இரு தரப்பினரும் முரண்பட்ட வாதங்களை முன்வைப்பார்கள் என்று தெரிகிறது.
Discussion about this post