WhatsApp Channel
திருப்பதியில் கடந்த மாதம் 97.47 லட்சம் லட்டுகளை பக்தர்கள் வாங்கிச் சென்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு கடந்த நவம்பர் மாதம் 19 லட்சத்து 73 ஆயிரம் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில், திருப்பதியில் கடந்த மாதம் 108 கோடியே 46 லட்சம் ரூபாய் உண்டியல் வசூலாகியுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் பக்தர்கள் வாங்கிய லட்டுகளின் எண்ணிக்கை 97,47,000 ஆகவும், கடந்த மாதம் 7,600,000 பக்தர்கள் முடி காணிக்கையாக செலுத்தியதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Discussion about this post