WhatsApp Channel
2026ல் ஆட்சி அமைக்க பிரதமர் மோடி தமிழகம் வருகிறார் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரும் நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:-
தமிழக அரசியல் எனக்கு முக்கியம்; டெல்லி அரசியலில் ஆர்வம் இல்லை. பிரதமர் மோடியின் உத்தரவை மதிக்கிறேன். பிரதமர் மோடியின் விருப்பப்படி கோவையில் போட்டியிடுகிறேன்.
நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் பா.ஜ.க. வெற்றி பெறும் தமிழகத்தில் அரசியல் மாற்றம் கோவையில் இருந்து தொடங்க வேண்டும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 40 நாட்கள் தங்கியிருந்து பரப்புரை செய்தாலும் கோவையில் பா.ஜ.க. அது வெற்றி பெறும். 2026ல் ஆட்சி அமைக்க பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.
அவர் கூறியது இதுதான்.
Discussion about this post