WhatsApp Channel
பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேசம் 45.1 ஓவரில் 204 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இன்று நடந்து வரும் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் – வங்கதேச அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்ய அறிவித்தது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆனால், வங்கதேசத்துக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது.
தொடக்க வீரர் டான்சித் ஹசன் (0), நஜ்முல் உசேன் சாண்டோ (4), அனுபவ வீரர் முஷ்பிகுர் ரஹீம் (5) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக அந்த அணி 23 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதையடுத்து லிட்டன் தாஸ்-மகமதுல்லா ஜோடி அணியை ஓரளவு சரிவில் இருந்து மீட்டது. லிட்டன் தாஸ் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். மகமதுல்லா அரைசதம் அடித்து 56 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் கேப்டன் ஷகிப் அல் ஹசன் சற்று தாக்குப்பிடித்து விளையாடி 43 ரன்களும், மெஹ்தி ஹசன் 25 ரன்களும் எடுத்தனர். மீதமுள்ள வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் வங்கதேசம் 45.1 ஓவரில் 204 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் ஷஹீன் அப்ரிடி, முகமது வாசிம் ஆகியோர் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.
Discussion about this post