இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்: பள்ளி மாணவி கர்ப்பம் கல்லூரி மாணவன் கைது

0
33

சென்னை: அம்பத்தூர் அடுத்த பாடியை சேர்ந்த 16 வயது சிறுமி முகப்பேரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாள். கடந்த 7ம் தேதி சிறுமி கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டதால் பெற்றோர் அவளை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுமி 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

இதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தது. அதன்படி இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி தலைமையில் போலீசார் மருத்துவமனை சென்றனர். விசாரணையில், அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த கல்லூரி மாணவர் பார்த்தசாரதி (எ) பாலாஜி (19) என்பதும், இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமியிடம் தொடர்பு ஏற்பட்டு அடிக்கடி செல்போனில் பேசி பழகியதும் தெரியவந்தது. பின்னர் கடந்த 6 மாதமாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2 மாதத்திற்கு முன்பு பார்த்தசாரதி பாடிக்கு அடிக்கடி வந்துள்ளார். பின்னர், அவர் சிறுமியை தனது பைக்கில் அழைத்துக் கொண்டு சென்னை முழுவதும் சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது. இதில், ஏற்பட்ட நெருக்கம் காரணமாக சிறுமி கர்ப்பமடைந்தது தெரியவந்தது.
புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் பார்த்தசாரதியை கைது செய்து சிறையில் அடைத்ததனர்.

Source Dinakaran

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here