நாடகமாடுகிறார் பிரியங்கா பா.ஜ., சரமாரி குற்றச்சாட்டு

0
19
புதுடில்லி-பெண்களின் போராளியாக தன்னை காட்டிக் கொள்ள காங்., பொதுச் செயலர் பிரியங்கா நாடகமாடுகிறார் என, பா.ஜ., குற்றம்சாட்டியுள்ளது.

latest tamil news

பா.ஜ., செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது:பெண்களின் உரிமைகள், பாதுகாப்புகாக போராடுபவராக தன்னை காட்டிக் கொள்ள பிரியங்கா நாடகமாடுகிறார்.பா.ஜ., ஆட்சி நடக்கும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான சிறிய வன்முறை நடந்தாலும், அங்கு ஓடிச்சென்று அவர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதில் பிரியங்காவும், அவரது சகோதரரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆனால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான எந்த வன்முறை நடந்தாலும் கண்டும் காணாதது போல் இருக்கிறார்.ராஜஸ்தானில் ஆல்வார் மாவட்டத்தில் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி, மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். அவரை பார்க்கக் கூட பிரியங்கா செல்லவில்லை.

latest tamil news

இது பற்றி புகார் மனு கொடுக்க வந்தோரையும் சந்திக்க மறுத்து காங்கிரஸ் தொண்டர்களுடன் பிரியங்கா தன் பிறந்தநாளை கொண்டாடினார்.பா.ஜ., ஆளும் மாநிலங்களில் பெண்களின் போராளியாக காட்டிக் கொள்பவர், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பெண்களை பற்றி சிறிதும் கவலைப்படாமல் இருக்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.

Source Dinamalar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here