மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது.

பின்னர் சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன் பிரியாவிடையுடன் எழுந்தருளினர்.

விழா நவ., 23 வரை நடைபெற உள்ளது.விழாவில், 10 நாட்கள் நடக்கும் விழாவில், மீனாட்சி சுந்தரேஸ்வரர், பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை ஆடி வீதியில் புறப்பட்டு அருள்பாலிக்கிறார். நவம்பர் 19ஆம் தேதி திருக்கார்த்திகை அன்று மாலை கோயில் முழுவதும் லட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றப்படும். அன்று இரவு 7 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பட்டு சுவாமி சன்னதி, சித்திரை வீதி கொக்கப்பனை ஏற்றும் விழாவில் எழுந்தருளுவார்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் கே.செல்லத்துரை செய்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here