விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதா, சில தனியார் கிரிப்டோகரன்சிகளுக்கு தடை விதித்தல், ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ கிரிப்டோகரன்சிக்கு அங்கீகாரம் வழங்குதல் உள்ளிட்ட 26 மசோதாக்களை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அவசர சட்டங்களாக இயற்றப்பட்ட 3 சட்டங்களுக்கு பதிலாக மசோதாக்களை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. போதைப்பொருள் தடுப்பு, ஊழல் தடுப்பு திருத்தம் மற்றும் டெல்லி சிறப்பு போலீஸ் உருவாக்கம் ஆகியவற்றுக்கான அவசர சட்டங்களுக்கு பதிலாக சட்டங்கள் இயற்றப்பட உள்ளன.

மத்திய அரசு கடந்த ஆண்டு இயற்றிய 3 விவசாயச் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், அவற்றைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் அறிவித்தார். அதைத் தொடர்ந்து குளிர்கால கூட்டத்தொடரில் அந்த சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கிரிப்டோகரன்சி மற்றும் டிஜிட்டல் கரன்சிகளை ஒழுங்குபடுத்தும் மசோதா அறிமுகப்படுத்தப்படும், சில தனியார் கிரிப்டோகரன்சிகள் தடைசெய்யப்படும் மற்றும் ரிசர்வ் வங்கியால் அதிகாரப்பூர்வ கிரிப்டோகரன்சிகளை அறிமுகப்படுத்த அனுமதிக்கும் மசோதா நிறைவேற்றப்படும்.

உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், அதையொட்டி, பட்டியல் மற்றும் பழங்குடியினர் திருத்த சட்டம் கொண்டு வரப்படுகிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கான ஊதியத் திருத்த மசோதா 2021 நிறைவேற்றப்பட உள்ளது.

இது தவிர, திவால் சட்டத்தில் 2வது திருத்த மசோதா, ஓய்வூதிய ஒழுங்குமுறை மேம்பாட்டு மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

குடிவரவு சட்டம் 1983 திருத்தப்பட்டு புதிய குடிவரவு மசோதா 2021 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மசோதாவில் குடியேற்றத்தில் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவை அடங்கும்.

மனித கடத்தலை தடுக்கவும், பாதுகாக்கவும், மறுவாழ்வு அளிக்கவும் மசோதா கொண்டு வரப்பட உள்ளது.

குழந்தைகள், சிறுமிகள் மற்றும் பெண்களைக் கடத்துவதில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான சட்டப் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு, சட்ட உதவி மற்றும் உரிமைகள் ஆகியவற்றை இந்த மசோதா வழங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here