இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,119 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 396 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு குறித்த புள்ளி விவரத்தை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவர்கள்: 9,119

இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 3,45,44,882.

கடந்த 24 மணிநேரத்தில் மீட்கப்பட்டது: 10,264.
இதுவரை குணமடைந்தவர்கள்: 3,39,67,062.

நோயிலிருந்து மீண்டு வருபவர்களின் சதவீதம் 98.33% ஆக அதிகரித்துள்ளது. இது மார்ச் 2020க்குப் பிறகு அதிகபட்சமாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு: 396. இறப்பு எண்ணிக்கை 1.35 சதவீதமாக குறைந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை: 4,66,980.

சிகிச்சை பெறும் உள்நோயாளிகளின் எண்ணிக்கை: 1,09,940. இது கடந்த 538 நாட்களில் குறைந்த அளவாகும். சிகிச்சை பெறும் நோயாளிகளின் விகிதம் 0.32 சதவீதம் குறைந்துள்ளது.

கொரோனா தடுப்பூசி: நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை, 1,19,38,44,741 கோடி பேர் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 90,27,638 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சோதனை: இந்தியாவில் இதுவரை மொத்தம் 63,59,24,763 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன, புதன்கிழமை மட்டும் 11,50,538 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here